தென்காசி மாவட்டம்
சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் இடையர் தவணை விலக்கு அருகில் ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் பெயரில் மதுபான கடை நடத்தப்பட்டு வருகிறது
இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடித்து குடித்து தன் வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது இடையர் தவணைக்கு பேருந்து வசதி சரியாக கிடையாது
காலை மாலை என்றுதான் போக்குவரத்து வசதி உள்ளது ஆகையினால் இடையர்தவணையில் வசிக்கும் பெண்கள் பள்ளி மாணவிகள் மாணவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது
இந்த மதுபான கடையினால் பெண்கள் மிகவும் குடிகாரர்களின் சீண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது ஆகையினால் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் இந்த கடையினால் மிகவும் தொந்தரவாக உள்ளது
பாட்டில்களை வயல்வெளிகளிலும் தோப்புகளிலும் குடித்துவிட்டு உடைத்து போடுவதினால் விவசாயிகள் காயம் ஏற்படுகிறதுஆகையினால் இந்த தனியார் கடையை அகற்றும் படி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் பெண்கள் மனு வழங்கினர் இந்த கடையை உடனடியாக விரைவில் அகற்றப்படாவிட்டால் சுற்றியுள்ள கிராமங்களின் பொதுமக்களை திரட்டி மதுபான கடை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்