மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட் டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் அபினேஷ் (வயது 7). இவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அவனை பாம்பு கடித்தது. இதையறிந்த குடும்பத்தினர் அபினேஷை உடனடியாக மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்ட நிலையில், வழியிலேயே அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *