ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500 மருந்து கடைகளை நாளை புதன்கிழமை ஒரு நாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக மதுரை மாவட்ட மருந்து வணிக சங்கம் அறிவிப்பு.
மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர் சங்க அரங்கத்தில் மருந்து வணிக சங்க ஆலோசனை கூட்டம் மாவட்டத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
மருந்து வணிக சங்க பொதுச் செயலாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக மருந்து வணிக சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறிய போது ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்றும்,ஆன்லைன் மருந்து விற்பனையை உடனே நிறுத்திட வலியுறுத்தியும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறைகளை காத்திட கோரியும், உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திட கோரியும், போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிக நிறுவனங்கள் கடைகள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.
மதுரை மாவட்டத்திலுள்ள 2,500 மருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மருந்து வணிக சங்க மதுரை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே போராட்டம் நடைபெற இருப்பதாக கூறினர்.
இந்தப் போராட்டத் திற்குப் பின்பு தமிழக முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் வணிகர் சங்கத்தினர் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர்..