அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை


தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை பொது வெளியில் ஒருமையில் பேசி இருக்கிறார்

மேலும் எங்கள் கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருவரை தூத்துக்குடிக்கு வந்தால் சட்டையை கிழிப்பேன் மேலும் அவரையும் கடினமான வார்த்தைகள் பயன்படுத்தி கொச்சையாக பேசி இருக்கிறார்

இதற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதுதான் நீங்கள் இத்தனை வருடம் அரசியல் செய்த சபை நாகரீகமோ தமிழக வெற்றி கழகத்தின் இந்த வெற்றியானது திமுகவிற்கு ஒரு பேரிடியாகவும் மிகப்பெரிய மீள முடியாத அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறது என்பது தான் நிஜம் அந்த அதிர்ச்சியின் விளிம்பில் இவர்கள் இப்படி பேசுவது வாடிக்கை தான் போல நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களாக ஆகிறது அதே நேரத்தில் எங்கள் செயல்பாடுகளை நேரம் கொடுத்து கூட விமர்சனம் செய்ய பொறுமை இல்லை அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தைகளை வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்று பேசினார்.

ஆனால் உண்மையானது நீங்கள் மேடை நாகரிகம் தெரியாமல் தரக்குறைவாக விமர்சனம் செய்வது பொதுவெளியில் ஆபாசமாக பேசுவது இப்படிப்பட்ட கலாச்சாரத்தை தான் இப்பொழுது உள்ள மக்கள் விரும்பவில்லை என்பதை இந்த வாக்குப்பதிவு தெரியப்படுத்துகிறது. கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பது தான் தமிழக வெற்றி கழகத்தின் ஒரே நோக்கமாகும். முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்வது போல மக்கள் தேவைகளை அறிந்து அதை செயலில் காட்டுவோம் நீங்கள் வைத்த மோசமான மற்றும் தர குறைவான விமர்சனங்களுக்கு அது பதிலாக இருக்கும். மேலும் நாங்கள் எங்கள் மக்கள் பணியின் மூலம் உங்களுக்கு உண்டான பதிலை கொடுப்போம் நாங்கள் மிகவும் நேர்த்தியாகவும் நாகரீகமாகவும் அரசியல் செய்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *