திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஏழாவது முறையாக வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று தனது தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். முதலாவதாக பொருளாதார ரீதியில் நலிவடைந்த திமுக கட்சியைச் சேர்ந்த மூன்று விவசாயிகளுக்கு வீட்டில் வளர்க்கும் வகையில் மாடுகள் வழங்கினார். மேலும் 3 விவசாயிகளுக்கு வீடுகளில் வளர்க்கும் வகையில் ஆடுகள் வழங்கினார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும்போது.

கழகத் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3 ம் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்தர மடிக்கணினிகள் வழங்கப்படும்.

மேலும், அதிமுக மற்றும் காங்கிரஸிலிருந்து விலகிப் பலர் கழகத் தலைவரின் தலைமையில் இணைய விரும்புவதாகவும், அதற்கான தேதியைத் தலைவரிடம் கேட்டுப் பெற்று வரும் 28 ம் தேதி அவர்கள் கட்சியில் இணைக்கப்படுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமே திராவிட கலாச்சாரத்தைப் பாதுகாக்கக் கூடிய இயக்கம் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து கழகத் தலைவரே இறுதி முடிவு எடுப்பார்.

திருச்செந்தூர் தொகுதியில் புதிய பாதாள சாக்கடை திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், பக்தர்கள் குளிப்பதற்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், 1000 ஏக்கரில் கார் பார்க்கிங் வசதி அமைத்து, அங்கிருந்து கோயிலுக்குச் செல்வதற்கான உள்கட்டமைப்பை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காயல்பட்டினத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க முறையான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். உடன்குடி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் தாமிரபரணி ஆற்று நீர் வீணாவதைத் தடுத்து, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தப்படும். திருச்செந்தூர் கோயிலில் நிகழ்ந்த ஊழல் முறைகேடு தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சட்டம் என்றும், இதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ‘சினிமாவில் நடிப்பது போல் நடித்தால் மட்டும் போதாது, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்’. 74 வயதாகி விட்டது, இருக்கும் காலம் வரை மனதில் பட்டதை தைரியமாகப் பேசுவேன். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தமது குரல் எப்போதும் ஒலிக்கும். தலைவருக்கும் இளந்தலைவருக்கும் மட்டுமே தான் கட்டுப்படுவேன் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.

பேட்டி
1. அனிதா ராதாகிருஷ்ணன் (சட்டமன்ற உறுப்பினர்)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *