திருவாரூர் செய்தியாளர்
V, செந்தில் குமார்

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . 10க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தாலுகா போலீசா விசாரணை.

திருவாரூர் அருகே திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் நகரப் பேருந்து சென்றபோது பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்தது பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் உடன பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர் இதில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேருந்து ஸ்ப்ரிங் கட்டானதாகவும் இரவு சென்னைக்குச் சென்று திரும்பிய ஓட்டுனரை தொடர் பணி வழங்கியதால் தூக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் எனவும் தாலுக்கா போலீசாரின் விசாரணையில் தெரிய வருகிறது.

பேட்டி திருநீலகண்டன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *