செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.


அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டில்
பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவு மே 20 ஆம் தேதி நேற்று வெளியிடப்பட்டது.


இதில் அச்சிறுப்பாக்கம் மாவார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்
ரா.தேஜேஷ்வ்ர் 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,க.சக்திவேல் 445 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும்,ஏ.தட்சணா 436 மதிப்பெண் பெற்று பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.


முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் மட்டும் இல்லாமல் தேர்வில் வெற்றி பெற்ற
அனைத்து மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.டி.விஜயகுமார் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் அ.ஜெயமுருகன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *