துறையூர் மே-23
திருச்சி மாவட்டம் துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் இமயம் இயற்கை மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் கிளை நூலகத்தில் நடைப்பெற்றது.
விழாவிற்கு வாசகர் வட்டத் துணைத்தலைவர் வி.வேணுகோபால் தலைமை வகித்தார். துறையூர் இமயம் இயற்கை மருத்துவமனை சேர்மன் ஆண்டி, மருத்துவமனை முதல்வர் ஹேமலதா, வாசகர் வட்ட மூத்த உறுப்பினர் து.சி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்றவர்களை நூலகர் பெ.பாலசுந்தரம் வரவேற்றார்.
இம்முகாமில் மருத்துவனையின் இயற்கை மருத்துவர்கள் ரூபிதா, பிரசன்னா ஆகியோர் புறநோயாளிகளுக்கு இலவச பாதஅழுத்த சிகிச்சை, சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், முழங்கால் மூட்டுவலி போன்றவற்றிக்கு சிகிச்சையும், உணவு முறைகள் பற்றிய மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கினார்கள். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அனைவருக்கும் இலவச பாத சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 120 மேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். மருத்துவர்களுக்கு செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியாக இருந்தனர்.
இவ்விழாவில் வாசகர் வட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், வாசகர்கள், மூத்தோர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் மற்றும் நூலக பணியாளர்கள் மு.உமாமகேஸ்வரி, வீ.கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக வாசகர் வட்ட பொறுப்பாளர் புள்ளியல்துறை அலுவலர் ந.தில்லைநாயகம் நன்றி கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்