இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் சுமார் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வரவேற்புரையாற்றிய இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன், பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான வரவேற்பும் தேவையும் அதிகரித்து வருவதாகவும், Articleship எனப்படும் நடைமுறைப் பயிற்சி திறமையான தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கான Campus Placement வாய்ப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சிஏ ஜி. ராமசாமி, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அகில இந்திய முன்னாள் தலைவர் (2011-12), சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை பட்டயக் கணக்காளர் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் பல்வேறு தொழில் துறைகள், நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் திறமையான பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

பட்டயக் கணக்காளர்கள் இனி கணக்குப்பதிவு மற்றும் தணிக்கை பணிகளில் மட்டுப்படாமல், நிறுவன ஆலோசகர்கள், அபாய மேலாண்மை நிபுணர்கள், CFO-க்கள், வரிவிதிப்பு ஆலோசகர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிபுணர்களாக உருவெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். IFRS, சர்வதேச வரிவிதிப்பு, Transfer Pricing, IPO ஆலோசனை மற்றும் Global Audit Standards போன்ற துறைகளில் அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

AI, Machine Learning, Blockchain, Cloud Computing மற்றும் Data Analytics போன்ற தொழில்நுட்பங்களை இளம் பட்டயக் கணக்காளர்கள் கற்றுக்கொள்வது காலத்தின் அவசியம் என்றும், தொழில்நுட்பத்தை அச்சமாக பார்க்காமல் புதிய வாய்ப்பாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் , பிராந்திய கவுன்சில் உறுப்பினர், A. V. அருண், பிராந்திய கவுன்சில் உறுப்பினர், மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *