கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் மாரப்பா ஜி.ஆறுச்சாமி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்..
கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கீதா பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்து கல்லூரியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பேசினார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எம். கிருஷ்ணன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வி அறிவுடன் நல்ல பண்புகள் மற்றும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வது அவசியம் எனக் குறிப்பிட்டார்.கல்வி என்பது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாது சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி முயற்சிகள் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்றடைந்தால் தான் உண்மையான நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்றார்.
இந்த விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..