அலங்காநல்லூர்.மே. 25
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவினை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்
விஷால்கிருஷ்ணா, தலைமையில் ஒன்றிய செயலாளர்
விஜய்ஹரிஷ்,வடக்கு ஒன்றிய நிர்வாகி கார்த்திக் முன்னிலையில் அங்கு அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளையம்பட்டி பகுதியில் வடக்கு ஒன்றிய நிர்வாகி கார்த்திக் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத், ரஸ்னா , உள்ளிட்டவைகளை வழங்கினார்.இதில் பாலமேடு பேரூர் செயலாளர் புகழ்,
மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு ஒன்றிய நிர்வாகி தனசேகரன்,
இணைச் செயலாளர்ராமநாதன், வலையபட்டி கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,
அலங்காநல்லூர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் கீதாபாலாஜி,மதுரை மேற்கு ஒன்றிய நிர்வாகியும் தொழிலதிபருமான அரியூர் ராதாகிருஷ்ணன்,வெள்ளையன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன்,வாடிப்பட்டி வழக்கறிஞர் தியாகராஜன், மற்றும் தாமு, வலையப்பட்டி கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,சிறுவாலை செல்வம், மற்றும்ராஜ்குமார், கண்ணன்,வெள்ளைகெங்கை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.