மன்னார்குடி., மே. 24

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் கூறுகையில் கர்நாடகா அரசாங்கம் சட்டவிரோதமாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக மேகதாட்டு அணைக்கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்திற்கு சமர்பிப்பதற்கான நடவடிக்கை துவங்கியிருக்கிறது.

இது முழுமையும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்ல பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு சித்தகோஸ் முகர்ஜி தலைமையில் 1990 இல் உருவாக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007 இல் வழங்கப்பட்டிருக்கிறது. 2007 தீர்ப்பின் அடிப்படையில் கீழ் பாசன விவசாயிகள் குறிப்பாக தமிழ்நாடு புதுச்சேரி விவசாயிகள் பாதிக்கும் வகையில் புதிய அணைகளை கர்நாடகம் கட்டக்கூடாது என்பதை தெளிவுபட தெரிவித்திருக்கிறது.

இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது . அந்த தீர்ப்பை மத்திய அரசுதலில் வெளியிட்டு சட்டமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கீழ்பாசன விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் மேகதாட்டில் அணையை கட்ட கர்நாடகம் முயற்சி எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

மேகதாட்டில் அணை கட்டினால் கிருஷ்ணராஜ சாகர் பாசனப்பகுதி பாலைவனமாக மாறும் எனவே தமிழகராசி மணல் அணை கட்டிக்கொண்டால் குடிநீருக்கு தேவையான தண்ணீரை கர்நாடகம் எடுத்துக் கொள்ளலாம் மேகதாட் அணை கட்டுவதை கர்நாடக ஏற்கவில்லை என கர்நாடக தமிழக விவசாயிகள் அமர்ந்து பேசி முடிவெடுத்திருக்கிறோம்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2025 திமுக ஆட்சி உரிய முறையில் நடுவர் மண்ற இறுதி தீர்ப்புனுடைய வாதங்களை எடுத்துரைக்காமல் கர்நாடகாவிற்கு ஆதரவாக வரவு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு முழு பொறுப்பு திமுக ஏற்க முன் வரவேண்டும் குறிப்பாக இன்றைக்கு புதிய ஆட்சி அமைந்திருக்கிற தமிழக முதலமைச்சர் விஜய் மறு சீராய்வு மனுவை திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்தாலும் அதை விரைவுபடுத்தாமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கிற மறுசீராய்வு மனுவை விரிவுபடுத்தி மேகதாட் அனைக்கான அறிக்கை தயார் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு நிறுவன ஆணையம் நீர்வளத் துறை ஆணையம் உடனடியாக அனுமதி வழங்கக் கூடாது.

கர்நாடகம் மேகதாட் அனையை கர்நாடக தமிழக விவசாயிகள் நலன் கருதி கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி. வருகிற ஜூன் 2ஆம் தேதி மேகதாட்டு அணை நோக்கி முற்றுகை போராட்டத்தை துவங்க இருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறோம் எனவே கர்நாடக அரசு மேகதா அணை கட்டுவதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *