கூத்தாநல்லூர்., மே 24

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது.

பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது ஐதீகம். இந்நாட்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா காட்சியும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் ஒருபகுதியாக இன்று காலை ஸ்ரீமகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக் ஸ்ரீமகா மாரியம்மனை தங்களது குடும்பங்களை காத்தருளும் குலதெய்வமாக போற்றி வணங்கி வரும் சாத்தனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஒருங்கிணைந்து

குறிப்பாக திருமணமாகி புகுந்தவீடு என அழைக்கப்படும் கணவன் வீட்டுக்கு சென்றாலும் இத்தகைய வைகாசி மாத ஆண்டு திருவிழாவின்போது தங்களது குடும்பத்தை காத்தருளும் குலதெய்வ சன்னதிக்கு

குடும்பத்துடன் சொந்த ஊரான சாத்தனூருக்கு வந்து பூ , பழங்கள், தேங்காய், மஞ்சள்,புடவை, இனிப்பு வகைகள் உள்ளிட்ட மங்களப்பெர்ருட்கள் கொண்ட சீர்வரிசை தட்டுகளை கரங்களில் சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீமகா மாரியம்மன் சன்னதியில் சமர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

பின்னர் அம்மன் சன்னதியில் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்தனர் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசை பொருட்கள் தட்டுகளை சுமந்து ஊர்வலமாக வந்து ஸ்ரீமகா மாரியம்மனை வழிபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பக்தர்களை பிரமிக்க செய்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *