அண்ணா பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் திடீர் ஆய்வு.


தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அண்ணா பேருந்து நிலையத்தை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் மற்றும் பாதுகாப்பு வரை சுமார் 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது

இந்த கட்டிடத்தை மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா ஆகியோர் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பொது சுகாதார வளாகத்திற்கு நீர் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது டேங்க் எங்கு உள்ளது என்ற விபரங்களை மேயர் ஜெகன் கேட்டறிந்தார் அப்போது அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தி அடையாத மேயர் ஜெகன் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளுக்கும் எந்த விதமான தங்கு தடை என்று நீர் வழங்க வேண்டும் அதற்காக கூடுதலாக டேங் அமைக்க வேண்டும். என்று கூறினார்

மேலும் புதியதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகத்தை சில மாற்றங்கள் செய்ய மேயர் ஜெகன் உத்தரவிட்டார். மேலும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் குறைகளையும் மேயர் ஜெகன் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *