கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 62 மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில் அனைத்து மாணவியர்களும் தேர்ச்சி பெற்று பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளது

அதைத்தொடர்ந்து 419 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த எஸ்.தமிழரசி, 408 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த எஸ்.நர்மதா, 404 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்த ஏ.தனிஷ்கா ஆகிய மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்களும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர் அதேபோல சக மாணவிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களை பாராட்டி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *