மாவட்டம் 324 2Fபன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பாக பெரிதனும் பெரிது கேள் மண்டலம் 8,14,15, மண்டல ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்ச்சியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது சேவைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து மண்டல தலைவர்கள்,பொறுப்பாளர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து அறிமுகப்படுத்தினார்.
விழாவில் மாவட்ட துணை நிலை ஆளுநர் டாக்டர் ஸ்டாலின்,மாவட்ட அவைப் பொருளாளர் எழிலரசி ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள்.இதில் ஜெயங்கொண்டம், மண்டலம் 8 மண்டலத் தலைவர் சுரேஷ்,கும்பகோணம் ஹோஸ்ட் மண்டலம் 14,மண்டலத் தலைவர் மோகன்,குடந்தை கிரீன் டவுன்,மண்டலம் 15,மண்டலத் தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்