நாகப்பட்டினம்,மே.25-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கலியப்பெருமாள் உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர் சாமிநாதன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ப.கொந்தகை, இந்திராநகர், மெயின்ரோடு பகுதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி சாலைகளில் சுற்றி திரிந்த சுமார் 15 மாடுகளை ஊழியர்கள் பிடித்தனர். பிடிபட்ட ஒரு மாட்டு உரிமையாளர்களே வரவழைத்து எச்சரித்து மாடுகளை அனுப்பி வைத்தனர் மேலும் இது போல் தொடர்ந்து சாலைகளில் விட்டால் ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *