தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் கண்வலி விளைவித்து அதன் விதையை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று வரும் நிலையில் சுமார் நான்கரை கோடி ரூபாய் பணம் தராமல் விவசாயிகளை இழுத்தடித்ததால் மூலனூர் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் கண்வலி விதை உற்பத்தி செய்து விற்பனை செய்த வந்த நிலையில் பழனிச்சாமி என்ற விவசாயி
நிலத்தில் செங்காந்தல் மலர் எனும் கண்வலி விதை வளர்த்தி அறுவடை செய்து
உத்திரகாண்ட் மாநிலம் ஹரிதுவர் மாவட்டம், பகவான்பூர் லக்ஸ்வாரி சிக்கந்தர்பூர் பன்ஸ்வால் கதவு எண் 163/3, 164,165 ல் செயல்படும் ஜேம்ஸ் லைப் சயின்சஸ் பிரைவேட் லிமிட் தலைமை அலுவலகம் 9 வது தளம் 916 விசால் டவர் டிஸ்ட்ரிட் சென்டர் ஜகைபூர் புதுடெல்லி 110058 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்ற நிறுவனத்தின் உரிமையாளர் அனுஜ் பரசுராம் மற்றும் மேற்படி நிறுவனத்தின் இடைதரகர்கள் 1 பழனிச்சாமி ஆகியோர் என்னை அணுகி மேற்படி எங்கள் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக கண்வலி விதை கொள்முதல் செய்து வந்தோம்
மேற்படி எங்கள் நிறுவனத்தின் கண்வலி விதை விற்ற விவசாயிகளுக்கு இரண்டு மாத கால தவணையில் வங்கி கணக்கில் முழுத்தொகையையும் செலுத்தி.நியாயமாகவும் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையோடும் எங்கள் ஜேம்ஸ் லைப் சயின்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் செயல்படுகிறது.
இதனால் நீங்கள் உற்பத்தி செய்த கண்வலி விதையை எங்கள் ஜேம்ஸ் லைப் சயின்சஸ் நிறுவனத்திற்கு இரண்டு மாத கால தவணையில் வழங்குங்கள் இரண்டு மாதம் முடிந்ததும் உங்கள் வங்கி கணக்கிற்கு கொள்முதல் தொகையை செலுத்தி விடுகிறோம் என்று கூறினார்கள்.
மேற்படி நிறுவன உரிமையாளரும் இடைதரகரர்களும் கூறியதின் நம்பிக்கையின் அடிப்படையில் உற்பத்தி செய்த கண்வலி விதையயை ஒரு கிலோ ரூ.3500/- க்கு விலைபேசி 600 கிலோ விதையை 21,00,000/- ( ரூபாய் இருபத்தி ஒரு லட்சம் மட்டும்) ரூபாய்க்கு மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் அனுஜ் பரசுராம் இடைதரகர்கள் பொன்னுச்சாமி மற்றும் பழனிச்சாமி கொள்முதல் செய்து கண்வலி விதையை எடுத்து சென்றனர்.
மூன்று மாதம் கழித்து தொலைபேசியில் அழைத்து விவசாய தேவைகளுக்கு மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பல முறை கேட்ட போது எனக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 21,00,000/- (ரூபாய் இருபத்தி ஒரு லட்சம் மட்டும்) எனக்கு கொடுக்க வேண்டிய தொகையை எனது வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று மேற்படி அனுஜ் பரசுராம், பொன்னுச்சாமி பழனிச்சாமி ஆகியோரை கேட்ட போது இன்னும் ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறினார்கள்.
ஆனால் இரண்டு வருடங்கள் ஆகி படம் செலுத்தப்படவில்லை பலமுறை கேட்கும் என்னை மிரட்டி வந்ததால் நான் இப்பொழுது முகநூல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் இது குறித்து விவசாய பழனிச்சாமி கூறுகையில் நாங்கள் இவர் மட்டுமல்ல இது போல பல விவசாயிகள் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இதே பயிர் செய்து அவர்களுக்கு தந்துள்ளோம் எங்களுக்கு கோடி கணக்கில் பண வர வேண்டி உள்ளது
பலமுறை கேட்கும் 2024 2025 2026 3 வருடங்களாக போராடியும் பணம் கிடைக்காததால் இன்று காவல் நிலையத்தை நாடி உள்ளோம் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எங்களை மற்றொரு கம்பெனியான ரெட் லீப் கம்பெனி இரண்டு கம்பெனிகளும் சுமார் ஐந்து கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும் இப்பொழுது பாதிக்கப்பட்ட விவசாயிகள் 15 க்கு மேற்பட்டோர் காவல் நிலையத்தில் உள்ளோம் இது தொடர்பாக வெளிச்சத்துக்கு வராமல் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் ஒன்று இணைந்தால் இன்னும் பல கோடி ரூபாய் புகார் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எங்களுக்கு வேறு வழியில்லை அனைத்து பகுதிகளும் கடன் பெற்று கண்வலி விதை பயிர் செய்து கம்பெனிக்கு விட்டோம் எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார்கள் பலமுறை பல தடவை கேட்டும் எங்களை மிரட்டி வருகிறார்கள் எனவே நாங்கள் அனைத்து பக்கம் கடன் பெற்று எந்தவித கடன் அடைக்க முடியாமல் மிகுந்த வேதனை உள்ளோம் தற்கொலை செய்யும் நிலைமைக்கு கூட வந்து விட்டோம் உடனே எங்களுக்கு இந்த பணங்களை மீட்டு தர வேண்டும் ஜேம்ஸ் மட்டும் ரெட் லிப் நிறுவனங்கள் மூலம் பணத்தை காவல்துறை அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.