தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டால் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 365 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 1.12.000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை சிறுபான்மையினர் பெண் களுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தனித்துறை ஆட்சியர் கவிதா சா.
ப.தி. உதவி ஆணையர் பஞ்சாபகேசன் கலால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஏ. எடிசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.