வலங்கைமான்., மே 26

நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாட ப்படுகிறது. நவக்கிரகங்களில் குருவிற்கும், சனிவிற்கும் தனி இடம் உண்டு.

இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று 26ம் தேதி காலை 11 முதல் 11.05 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது ஜென்மராசி எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம். துலாம், தனுசு, கும்பம் ஆகிய 7 ராசிக்காரர்களும் பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அதன்படி நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை குருபெயர்ச்சி நாளுக்கு முன்னதாகவே பீடாதிபதிகள் மற்றும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்த வண்ணம் உள்ளனர்.

பொதுவாக நவக்கிரகங்களில் குருபகவான் நற்பலன்களை அளிக்க கூடியவராக அருள்பாலிப்பதால் குருபெயர்ச்சி நாளுக்கு முன்னதாகவே பக்தர்கள் அதிக அளவில் திரண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக குருபகவான் கல்வி, தொழில் ஆகியவற்றில் மேன்மை அளிப்பவராகவும், திருமணதடை நீக்கி அருள்பாலிப்பவராகவும் குருபகவான் விளங்குகிறார்.

இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவான் ஆலமரத்தின் அடியில் அமர்ந்தவாறு நவக்கிரக தோஷங்களில் பிரகஸ்பதி எனும் தோஷசத்தை நீக்கி அருளிபாலிக்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *