செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலதத்தாத்ரேயர் ஸ்ரீ குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
ஒவ்வொரு தமிழ் ஆண்டில் ஒரு ராசியிலிருந்து குரு பகவான் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி
ஆவதை குரு பெயர்ச்சி என்பர் இந்த ஆண்டு குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக
ராசிக்கு பெயர்ச்சி அடைக்கிறார்.
இதனையொட்டி காலை 7.00 மணிமுதல் 10.45 மணிவரைபரிகார ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 11.00 மணிக்கு குரு தட்சிணாமூர்த்திக்கு மஹா
அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் ஆராதனை மைசூர் அவதூத தத்த பீட ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி விஜயானந்த தீர்த்த சுவாமிகள் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசி நட்சத்திரம் கூறி பரிகாரம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறங்காவலர் எம்.வெங்கடேசன்
செயலர் ஆர்.தட்சிணாமூர்த்தி இயக்குனர் பொறியாளர் ஆர்.சத்தியகுமார் மூத்தார் அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் சகாதேவ் சிவாச்சாரியார் லோகேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனகா தத்தகிரி ஆசிரமம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.