ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர்.

குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திமுகவோடு கூட்டணியில் மிகப்பெரிய சக்தியாக இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை திருமாவளவன் திமுக விடம் கேட்டிருந்தார். ஆனால் எட்டு தொகுதி மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் திருமாவளவன் ஒத்துக் கொண்டாலும், கட்சி தொண்டர்கள் மத்தியில் திமுகவினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விசிக வினர் திமுகவிற்கு வேலை செய்யவில்லை. இது ஒரு புறம் இருக்க தேர்தல் முடிவு வந்ததற்கு பிறகு தனி பெரும் கட்சியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாத காரணத்தினால் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் இயக்கத்தின் ஆதரவை கோரியது தமிழக வெற்றிக் கழகம். கூட்டணி முடிவானது.

விஜய் முதலமைச்சரான கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸில் இருவருக்கும், சிறுத்தைக்கு ஒருவருக்கும், முஸ்லிம் கட்சிக்கு ஒருவருக்கு என கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்.பி. யுமான ஆ. ராசா விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து சமூக வலைதளத்தில் எதிர்மறையான பதிவு ஒன்றை பதிவிட்டார்.( முன்” ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!) இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆ. ராசாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த வாரம் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர். அதன்பிறகு ஆ. ராசாவை கண்டித்து குன்னம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை. இருந்தபோதிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பானந்தன் கூறினார். அதற்கு எதிர்ப்பாக திமுகவும் , குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். இவர்களுக்கும், போலீசார் அனுமதி தரவில்லை. இந்த நிலையில் இன்று காலை இரண்டு தரப்பும் குன்னத்தில் வந்து சேர்ந்தது சில நேரங்களிலே ஒருவருக்கொருவர் அசிங்கமான முறையில் பேசிக் கொண்டதால் இரண்டு தரப்பிலும் கற்களால் வீசப்பட்டு கம்புகள் வீசப்பட்டது.

இதனால் போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியது. ஆனால் பிரச்சனை தீர்ந்த பாடு இல்லை. இதில் சிறுத்தைகள் கட்சியினர் ராசாவை கண்டித்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என்கிறார்கள். ஒன்றும் இல்லாத பிரச்சனைக்கு ஆ. ராசா கூறிய கருத்துகளால் ஒரே சமூகத்திற்கு உள்ளே கலவரமாக மாறி இருக்கிறது என்கிறார்கள் நடுநிலையான அரசியல்வாதிகள்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *