நாகப்பட்டினம்,மே.26-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணிக்கவாசகம் பணி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் ஸ்டாலின்பாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பாலு வரவேற்றார். இதில் எங்கள் தலைமை ஆசிரியர் தனிக்கொடி, அண்ணாமலை பல்கலைக்கழக வேதியல் துணை தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் புறாக்கிராமம், கட்டுமாவடி ஜமாத் நிர்வாகிகள், ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.