அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு
18 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது முன்னதாக பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை
மாவிளக்கு எடுத்தல் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல் அழகு குத்துதல்
முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் வெங்கடேச பெருமாள் கோவில் சென்று திரும்புதல்அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மஞ்சள் நீராட்டுதல் முளைப்பாரி எடுத்து கண்மையில் கரைத்தல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அச்சம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் மந்தையம்மன் இளைஞர் அணி
விழா குழுவினர் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *