அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ராஜாக்கள்பட்டி கிராமத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழாவினையொட்டி
முதல் நாள் 18.05.26 (திங்கட்கிழமை)அழகர் கோவில் சென்று தீர்த்தம் ஆடி வருதல் அடுத்த நாள் அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து கொடியேற்றுதல் மற்றும் சுப முகூர்த்த கால் ஊன்றுதல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்தில் சென்று கிராமத்தின் சார்பில் பொங்கல் வைத்து அர்ச்சனை ஆராதனை செய்யப்பட்டது
அன்று இரவு ஸ்ரீபட்டாளம்மனுக்கு பூசாரி வீட்டில் இருந்து நகைப்பெட்டி எடுத்து வருதல் அடுத்த நாள் பட்டாளம்மனுக்கு நகைகள் அணிவித்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது
மேளதாளங்கள் முழங்க அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து பொங்கல் வைத்து தீபா தாரணைகளும் நடைபெற்றது.
அன்று காலை 9.00மணி முதல் மாலை 3 மணி வரை கிராம மந்தையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறவர்பட்டி சென்று அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மனை அழைத்து வருதல் பூசாரி வீட்டில் இருந்து நகைப்பெட்டி எடுத்து வந்து அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் ஆபரண அலங்காரம் செய்து முத்தாலம்மன் கோவிலுக்கு அழைத்து வருதல் மற்றும் வான வேடிக்கை மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அன்று இரவு முளைப்பாரி ஊர்வலம் வந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல் அர்ச்சனை ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.அடுத்த நாள் காலை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வாக கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சியும் அன்று மாலை ஸ்ரீ முத்தாலம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் பிரசாதம் வழங்குகளுடன் திருவிழா நிறைவு பெற்றது.இந்ததிருவிழாவுக்கான ஏற்பாடுகளை ராஜாக்கள்பட்டிகிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.