தருமபுரி – மே 29

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றோர், முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவன் தலைமையில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஆர். ரமேஷ் ஏற்பாட்டில் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *