தாராபுரம்,

தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற வர் சத்தியபாமா. இவர் திடீரென்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இது அந்த தொகுதி அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் த.வெ.க.வில் இணைந்தது எதற்காக என்று சத்தியபாமா நேற்று விளக்கம் அளித்துள் னார். இது குறித்து அவர் தாராபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமிக்கும். எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இவர்களின் குழப்பத்துக்கு மத்தியில், தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு எப்படி தீர்வு காண்பேன் என கவலையாக இருந்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது.

இதனால் எம்.எல்.ஏ.. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைய முடிவு செய்தேன். அதன்படி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தேன். நான் எந்த பதவி யையும் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்ற எனக்கு வேறு வழி தெரிய வில்லை. த.வெ.க.வில் சேர்ந்ததும் முதல்-அமைச்சர் விஜய் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங் களை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா அதிமுக மீது எடப்பாடி பழனிச்சாமி மீது அதிரடி குற்றச்சாட்டு

பத்திரிக்கையாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசிய தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சத்தியபாமா.

“திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார்” – சத்தியபாமா பரபரப்பு குற்றச்சாட்டு“அதிமுகவில் நிலைதடுமாறிய சூழல்… அதனால் தான் தவெகவில் இணைந்தோம்” – சத்தியபாமா விளக்கம்


“எங்களை தகுதி நீக்கம் செய்வதாக மிரட்டினர்” – அதிமுக தலைமையை சாடிய சத்தியபாமா

“அம்மா காலத்திலிருந்த ஒற்றுமை இப்போது அதிமுகவில் இல்லை” – சத்தியபாமா ஆதங்கம்

“திமுக கூட்டணி பேச்சால் அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி” – சத்தியபாமா“தவெகவில் குதிரை பேரம் இல்லை… அதிமுகவில் சொந்த செலவில் வென்றேன்” – சத்தியபாமா பதிலடி

“விஜய் ஆட்சி மக்கள் நல ஆட்சி என்பதால் தவெகவில் இணைந்தோம்” – சத்தியபாமா

“எங்களை யாரும் ஆலோசிக்கவில்லை… அதிமுகவில் குழப்பமே நீடித்தது” – சத்தியபாமா பரபரப்பு

“எடப்பாடியை எதிர்த்து பேசிய பிறகு மீண்டும் சேர மனமில்லை” – சத்தியபாமா மனம் திறந்து பேச்சு

“அதிமுக உட்கட்சி குழப்பம்ண் காரணமாகவே ராஜினாமா” –செய்ததாக சத்தியபாமா அதிரடி விளக்கம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *