தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் அணியை சேர்ந்தவா்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் என்பவா் வீட்டிற்கு வந்து ஆட்டோவை உடைத்து
அருவாளால் மிரட்டி எங்கள் அண்ணனை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதைப் பற்றி புகாராக தெரிவிக்கப்பட்டது. திமுகவின் சட்ட ஒழுங்கு பிரச்சனை இதோ ஆரம்பமாகிவிட்டது
இனி மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இதை காவல்துறையினர் சரியாக கையாள வேண்டும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்று தர வேண்டும் இல்லை என்றால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்று இதற்கு ஒரு முடிவு எடுப்போம். சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது
இல்லையேல் சட்டத்தை கையில் எடுக்கவும் காங்கிரஸ் கட்சி தயங்காது நான் முதல் முதலில் அனிதாவை எதிர்த்து பேட்டி கொடுத்ததற்கு எனக்கு பல மிரட்டல் கடிதங்கள் பல போன் கால்கள் எல்லாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளேன்
இவர்களின் நோக்கம் சட்டம் ஒழுங்கை சீரழிக்க வேண்டும் திமுக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதளவில் கொண்டு வரும் அதன் மூலம் இந்த ஆட்சிக்கு கலங்கத்தை விளைவிக்கும் இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் விசிகே மற்ற கூட்டணி கட்சிகள் என்றும் உறுதுணையாக இருக்கும் திமுகவின் தீய எண்ணங்களை நாங்கள் விரட்டியடிப்போம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.