தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

வேங்கி பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது; உயிர்தப்பிய ஓட்டுநர்.

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – திருப்பூர் நான்கு வழிச்சாலையில் வேங்கிப்பாளையம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து மதுரை கப்பலூர் நோக்கி பார்சல் பொருட்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் சரக்கு வாகனத்தை முருகன் (54) என்பவர் ஓட்டிச் சென்றார். வேங்கிப்பாளையம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனம் சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *