தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு
தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது….
தற்போது பகுதி ஏலத் தோட்டத்திற்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் குமுளி கம்பம் மெட்டு போடி மெட்டு வழியாக தினமும் 30 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் மற்றும் இதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வழித்தடத்டங்களை பயன்படுத்தி வருகின்றன
தேவராம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவராம் வழியாக சாக்கலூத்து இணைப்பு சாலை அமைந்தால் கேரளா செல்வதற்கான பயண தூரம் வெகுவாக குறைவதுடன் ஆயிரக்கணக்கான ஏழை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் இது குறித்து ஏலத் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர்கள் பொது மக்களிடம் கருத்துக்களை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா கேட்டறிந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் வலியுறுத்தி விரைவில் தேவாரம் சாக்குலூத்து மெட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் மேலும் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நனைவாகும் வரை என்னுடைய முயற்சிகள் தொடரும் என்றார்