பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.


பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதியில் எங்களது நிர்வாகத்தின் கீழ் தொடக்கபள்ளி 8 நடுநிலைப்பள்ளி 11 மேல்நிலைப்பள்ளி 1 என மொத்தம் 20 பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி தோ்வுக்குபின் கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி வியாழக்கிழமை பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


அதன்படி எல்லா பள்ளிகளிலும் எதிர்கால தலைமுறையினரான மாணவ மாணவிகள் நலன் கருதி பள்ளியில் உள்ள நிர்தேக்க தொட்டி கழிவறை விளையாட்டு மைதானம் மற்றும் ஆங்கில வழி கல்வி அறைகள் உள்ளிட்டவைகளை முழமையாக ஆய்வு செய்தோம். தேவையற்ற இடங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளோம் தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையான அனைத்து கட்டமைப்புகளும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப செய்து கொடுத்துள்ளோம் அதனால் கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. இரண்டு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பலா் சாதனை படைத்துள்ளனா்.

அதே போல் திறனாய்வு தோ்வின் மூலமும் தோ்ச்சி பெற்றவா்களை ெகளரவித்துள்ளோம். எதிர்கால தலைமுறையினாின் நலன் கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் தலைமை ஆசிாியா், உதவி ஆசிாியா்கள், ஆசிாியா்கள் நல்லமுறையில் பணியாற்றி வருகின்றனா்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாதுறையையும் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்தி சென்றதைபோல் எனக்கு கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று அரசு விழாக்களில் தொிவிப்பாா் கல்விக்கென்று கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்து எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு உழைப்பதை போல் நாங்களும் மாநகராட்சி பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் நலன் கருதி எல்லா பணிகளுக்கும் துணையாக இருந்து செய்து கொடுக்கிறோம். எல்லா பள்ளிகளும் திறப்பதற்கு தயாராக உள்ளது

மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓத்துழைப்பது போல் நல்லமுறையில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து பலனடைய வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் ஆங்கில வழி கல்விகள் நல்லமுறையில் ஆசிாியா்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனின் பேரில் 2021ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 100 மாணவர்கள் தான் படித்து வந்தனர்

ஆனால் தற்போது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 900 முதல் 1200 பேர் படித்து வருகின்றனர் இது முன்னாள் முதலமைச்சருக்கு கிடைத்த மாபெரும் சாதனையாகும் சில பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் கட்டப்பட இருக்கின்றன என்று கூறினாா்.


ஆய்வின் போது ஆணையா் ப்ாியங்கா, சுகாதார ஆய்வாளா் ஹாிகணேஷ், கவுன்சிலா் மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ். ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *