தூத்துக்குடி ஜூன் 2
தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனமுடைந்து உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் மாவட்டம் அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த பூக்கடை மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று 1.6.2026 அன்று மாலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் மாவட்ட கழக அலுவலகம் முன்பு மறைந்த பூக்கடை மகேந்திரன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, பகுதிச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர் நடராஜன், கே.ஜே. பிரபாகர், அருண் ஜெபக்குமார், தனராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவண பெருமாள், சரவணகுமார், வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ஆபிரகாம், ராஜ்குமார், தெர்மல் ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம், வட்டச் செயலாளர்கள் கொம்பையா, பூர்ண சந்திரன், ஜெரால்டு, மாடசாமி, சண்முகபுரம் மாடசாமி, பண்ணைவிளை சேகர், பிராங்கிளின் ஜோஸ், சுந்தர், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், பரிபூரண ராஜா, சகாய ராஜா, தளவாய் ராஜ், சிதம்பரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மறைந்த பூக்கடை மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.