மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்

தென்காசி.மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கல் குவாரியில் கல் உடைக்கும் கிட்டாச்சியில் இயந்திரத்தில் கல் உடைத்து கொண்டிருக்கும் போது பாறை சரிந்து கிட்டாச்சி இயந்திரம் மேல் விழுந்தது. அதில் உள்ளே இருந்து பணிபுரிந்த கீழ பாப்பாக்குடியை சேர்ந்த சேர்ந்த முருகன் (23)மகன் இசக்கி ராஜா என்பவர் பலி. சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அமைச்சர் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குவாரிகளின் செயல்படும் தன்மையை ஆராய்ந்து குறைவான அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய நிலையில் தினமும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதாலும் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பலியாக உயிர்களை தடுத்தால் சிறப்பானதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *