தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமா மகேஸ்வரபுரம் கிராமம், கோகுலம் நகர் மற்றும் ஆராவமுதன் நகர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த தார்சாலை விரிவாக்க பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், கிராமப்புற தார் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருவிடைமருதூர் தொகுதி (மு) சட்டமன்ற உறுப்பினரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கோ.வி. செழியன் பரிந்துரையில், கும்பகோணம் (மு) சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,கோகுலம் நகர் 2வது தெருவில் 210 மீட்டர் நீள சாலை அமைப்பிற்காக ₹6.50 லட்சமும், சாலை விரிவாக்க பணிக்காக ₹5.66 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பணிகள் கடந்த மார்ச் 3, 2026 அன்று தொடங்கப்பட்டதாகவும் ஆதாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
. இந்த பாதையில் கடந்த மூன்றுமாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டன. அதன் பிறகு மூன்று மாதங்கள் மேலாகியும் இதுவரை தார் ஊற்றி தார் சாலை அமைக்கப்படவில்லை. வெறும் ஜல்லிக்கற்கள் மட்டும் உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பள்ளி வாகனங்கள், விவசாய வாகனங்கள் இந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டூவீலரில் செல்வோர் விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதுஎனவே நிலுவையில் உள்ள இந்த சாலை பணிகள் கோகுலம் நகர் ஆராவமுதன் நகர் மகிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.