கடையநல்லூர் ஜூன் 4,
புளியங்குடியில் நடந்த சாலை விபத்தில் பலியான
மத்திய காவல் படை வீரரின் உடல் சொந்த ஊரான கடையநல்லூரில்
துணை ராணுவ படையினர் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் குடியிருக்கும் மாடசாமி மகன் பரமசிவன் இவர் 2014 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீ நகர் பகுதியில் மத்திய காவல் படை ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்
விடுமுறையில் ஊர் வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு புளியங்குடி அருகே உள்ள தன்னுடைய மனைவி ஊரான ஆண்டார்குளத்திற்கு சங்கரன்கோவில் புளியங்குடி நெடுஞ்சாலையில் முள்ளிகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது எதிரி வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் பரமசிவன் படுகாயம் அடைந்தார் உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது அவரின் உடல் சொந்த ஊரான கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது அங்குள்ள மயானத்தில் திருவனந்தபுரம் துணை ராணுவ வீரர்கள் அசிஸ்டன்ட் கமாண்டர் சரவணகுமார் தலைமையில் 11 துணை ராணுவத்தினர் பரமசிவன் உடலுக்கு மரியாதை செய்து நல்லடக்கம் செய்தனர்
இறந்த ராணுவ வீரர் பரம சிவனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்வில் கடையநல்லூர் காவல்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .