திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அருகில், காமராஜர் சிலை பகுதியில் செயல்பட்டு வரும் TASMAC மதுபானக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிற்கு அரசு பதில் வழங்கியுள்ளது.

அண்ணாமலையார் திருக்கோவில், பேருந்து நிலையம், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிக்கு அருகில் இந்த மதுபானக் கடை செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் மேற்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர் அரசிற்கு மனு அளித்திருந்தனர்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவில், பள்ளி மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் அரசு அளித்துள்ள பதில் வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *