அலங்காநல்லூர்.
ஜுன்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் கலந்துகொண்டு தீர்மான நகலை வாசித்தார்.

இதில் குடிதண்ணீர், தெருவிளக்கு வசதி,சிமெண்ட் சாலை மற்றும் பேவர்பிளாக் அமைத்தல்,குப்பை தரம் பிரித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வடுகபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் யூனியன் அலுவலர் லெட்சுமி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் பங்கஜவல்லி கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார் இந்த கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன்,மற்றும் பொதுமக்களும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் முடிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் இந்துமதி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *