திருவாரூர் செய்தியாளர் வே, செந்தில் குமார்

சுற்றுசூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களுக்கும் விரிவுபடுத்த கொத்தமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மனு
திருத்துறைப்பூண்டி ,ஜூன்-06. உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நகர்ப் புரங்களில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தைப் போல ஊராட்சி பஞ்சயாத்துக்களிலும் காலை உணவு திட்டத்தைப் தூயமை பணியாளர்களுக்கும் அமல் படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மனுவாக தரப்பட்டுள்ளது

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியின் சிறப்பு கிராம சபா கூட்டம் தனி அலுவலர் ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வம் சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு வந்திருப்பவரை வரவேற்று, சிறப்பு தீர்மானங்களை விளக்கி பேசினார்.


உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் , சுற்று சூழல் பேணுவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திவரும் தூய்மை பணியாளர்களின் நலத்தை பேணுகின்ற வகையில், நகர் புறங்களில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவு திட்டத்தைப்போலவே கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் காலை உணவு சிறப்புத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை கொத்தமங்கலம் ஊராட்சி சோழன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் சிறப்பு கிராம சபை வாயிலாக அரசுக்கு வைக்கப்பட்டது.


உலக சுற்று சூழல் பாதுகாப்பு தினத்தில் சோற்றுன சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தங்களின் நலனில் அக்காரை கொண்டு வைக்கப்பட்டிருக்கும் இந்த கோரிக்கைக்கு தூய்மை பணியாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *