பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6-
பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி சமூகநீதி மாணவர் விடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்க்கு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார்.
பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
நிகழ்சியில் ஆர்ஐ, ரேவதி, விடுதி காப்பாளர் மாதேஸ்,சங்க நிர்வாகிகள் செந்தில், உதயகுமார், நேதாஜி, சீனிவாசன், மணிவண்ணன், ஆனந்தன், ஜெயந்தி வெற்றிவேல், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.