பாப்பிரெட்டிப்பட்டி,
ஜூன் 6-
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் மாரி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி
கவுன்சிலர்கள்,அலுவளக பணியாளர்கள் கலந்துகொண்டுஅரசு கல்லூரி செல்லும் ரோட்டில் மரகன்றுகள் நட்டனர்.
இதேபோல் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் தலைமையில் செயல் அலுவலர் ஜீவானந்தம் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். கலந்துதிடக்கழிவு மேலாண்மை திட்டம் விதிகள் 2026 இன் படி, குப்பைகள் உருவாகும் இடத்திலேயே, 4 கழிவுகளாக பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. மேலும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் மற்றும் அய்யன் ஏரிக்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உறுப்பினர்கள் ,செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.