தென்காசி ஜூன் 8

தென்காசி மாவட்டம் இயற்கை சார்ந்த பொதிகை மலை தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியில் அமைந்த மாவட்டமாகும் இப்பகுதியில் அதிகமான நீர்வீழ்ச்சிகள் காணப்படுவதால் தற்போது சீசன் நிலவி வருவதாலும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளான பிரதான அருவி பழைய குற்றாலம் அருவி புலி அருவி ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது தற்போது சீசன் சரியான நேரத்தில் தொடங்கிய நிலையில் பிரதான அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் தற்போது அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கை அடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது குற்றாலம் ஏழைகளின் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் நிலையில் தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்களில் அருவிகள் இருந்தாலும் தென்காசிக்கு ஈடாகாது . தென்காசி மாவட்டத்தின் குற்றால அருவிகள் தனித்துவமானவை என்பதில் சந்தேகமில்லை.
குற்றால அருவிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைச் செடிகளின் வழியே வருவதால், அந்த நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும், மருத்துவ குணத்தையும் தருகிறது.

தென் மேற்கு பருவமழை காலத்தில் இங்கு நிலவும் வானிலை மிக அழகாக இருக்கிறது. தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் மேகங்கள், இதமான சாரல் காற்று, பசுமையான வயல்வெளிகள், மற்றும் ரம்மியமான நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கமாகத் திகழ்கிறது. குற்றாலம் சீசனில், குறிப்பாக மே முதல் செப்டம்பர் வரை உள்ள மாதங்களில் மலைகளோடு மேகங்கள் விளையாடும் காட்சி, கண்கொள்ளா காட்சியாக அமைகிறது

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அருவிகள் இருந்தாலும், குற்றாலத்தின் சிறப்பம்சங்கள் அதனை ஈடுஇணையற்றதாக மாற்றுகிறது குறிப்பிடத்தக்கது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *