பெண்களும் ஆண்களும் சமமாக உள்ள கும்பகோணம் கும்பேஸ்வரர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா கடிச்சம்பாடி தனியார் பளளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் இராம வேல்முருகன் தலைமை தாங்கினார். சங்க முன்னோடிகள் த கோபால்சாமி , சீனிவாசன் , பழனிவேல் ,வட்டார தலைவர் அன்பு செல்வி குளோபல் எக்ஸ்டென்ஷன் டீம் தலைவர் செந்தில்குமரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் ராம வேல்முருகன், செயலாளர் செல்லதுரை,பொருளாளர் , மோகன் மற்றும் அனைத்து நிர்வாகிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் சௌமா ராஜரத்தினம் பதவியில் அமர்த்தி
சிறுபுரையாற்றி தொடர்ந்து .நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது
தமிழர் பண்பாடும் அரிமா சங்கச் செயல்பாடுகளும் ஒன்றோடு ஒன்றிப் பின்னிப் பிணைந்தவை. பொருளீட்டலும் ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு ஈவதே தமிழர் மரபு. விருந்தோம்பல் தமிழரின் பணபாடு. இவையே அரிமாசங்கத்தின் நோக்கமும் ஆகும். எனவே சேவை நோக்கோடு சிறப்பாகச் செயலபடவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில்அரிமா சங்க முன்னோடிகள்
MJF Ln Er.P.செந்தில்குமரன்,
Ln C அன்புச்செல்வி,
PMJF Ln V.கோபால்சாமி,
MJF Ln C.சீனிவாசன்,
MJF Ln S.வில்வானந்தம்,
MJF மேஜர் Ln பழனிவேல் உள்ளிட்ட மூத்தநிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய தலைவராக இராம வேல்முருகன் செயலாளராக செல்லதுரை பொருளாளராக மோகன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பணியேற்றுக் கொண்டனர்.
துணைத்தலைவர் 1 ஆக
அரிமா ப்பி. மகாலிங்கம்
துணைத்தலைவர் 2 ஆக
அரிமா முனைவர் கே. மேகநாதன்
இணைச்செயலாளராக
அரிமா திருமதி கிருத்திகா செல்லதுரை,தலைமைப் பண்புக்குழுத் தலைவராக
அரிமா எஸ்.எஸ்.மாரியப்பன்
அடக்குநராக
அரிமா. திருமதி கே. கவிதா மோகன்,முடுக்குநராக
அரிமா. திருமதி திலகவதி ஆராவமுதன்,சேவைத்திட்டக்குழுத் தலைவராக அரிமா வி.மணிகண்டன்,உறுப்பினர் வளர்ச்சிக் குழுத் தலைவராக அரிமா ஜி ஆராவமுதன்
மக்கள் தொடர்பு அலுவலராக
அரிமா திருமதி ஹேமா மேகநாதன்
இயக்குநர்களாகஅரிமா
கு. சுகுமார், அரிமா.திருமதி மீனாட்சி சுகுமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொணடனர்
உறுப்பினர்கள்
அரிமா திருமதி எம். கல்யாணி மகாலிங்கம்,அரிமா. திருமதி எம். கோமதி மாரியப்பன்,அரிமா திருமதி எம். பவழரசிமணிகண்டன்
அரிமா. திருமதி சாந்தி வேல்முருகன்,அரிமா திரு ஏவிஎஸ் திருபுவனேஸ்வரன், அரிமா திருமதி ஜி கண்ணம்மாள் திருபுவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய உறுப்பினர் இருவர் சங்கததில் இணைந்து கொண்டனர்
விழாவில் 10 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முனைவர் மேகநாதன் ஆராவமுதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.