குண்டடம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
குண்டடம் அருகே, விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்.
விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று குண்டடம் அருகே, நடைபெற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குண்டடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முததுவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன்முருகசாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, கோவை அருகேயுள்ள இடையர்பாளையம் முதல் ஊத்துக்குளி அருகேயுள்ள காவுத்தம்பாளையம் வரை டவர்லைன் அமைக்கும் பணிகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்ததிட்டத்தை பிஏபி பாசனம் பெறும் விளைநிலங்கள், தோப்புக்கள் வழியாக செயல்படுத்த ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு செயல்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். விவசாயிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைக்கும்போது அதனால் பல்வேறு பாதிப்புகள் உருவாகும். வெறும் 52கிலோ மீட்டர் தூரதிற்குள் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை சுமார் 108கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு கொண்டு சென்று செயல்படுத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
எனவே இந்த திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கேபிள் வழியாக ரோடு ஓரங்களில் செயல்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசும் செவிசாய்க்காத பட்சத்தில் பெரியளவிலான போரட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முன்னெடுக்கும் என்றார். கூட்டத்தில் ருத்ராவதி பேரூராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் குப்புசாமி, செல்வராஜ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.