பெ.மணியம்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி முன்னாள் மாணவர் மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கினார்
திருச்சி ஜீன் -09
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பெ.மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் சதீஷ்குமார், தனது கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக தான் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நோட்டு மற்றும் எழுது பொருட்கள்
வழங்கி வருகிறார்.
அதே போல் இந்த கல்வி ஆண்டிலும் தனது கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 35 மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலையில் நோட்டு மற்றும் எழுது பொருட்களை சதீஷ்குமார் வழங்கினார்.இதில் பள்ளி
ஆசிரியர்கள் சதீஷ்குமார் மற்றும் சகுந்தலா, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுபோல் முன்னாள் மாணவர்களின் சேவை பள்ளிக்கு தேவை என்று சதீஷ்குமாருக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்