தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூடுதலாக சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்ககோரி, தர்மபுரி த.வெ.க., மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல்ராஜ் தலைமையில், நேற்று கலெக்டர் அலுலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி டவுனில் உள்ள தர்மபுரி அரசு மருத்துவகல்லுாரி மருத்தவமனைக்கு தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும், 1,-000த்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சிகிச்சைக்காக வருபவர் மற்றும் அவருடன் துணையாக வருபவர்களுக்கு சுத்தகரிக்கபட்ட குடிநீர் போதுமான அளவிற்கு கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறனர். இது குறித்து, உரிய ஆய்வு மேற்கொண்டு, தங்கு தடையின்றி சுத்திகரிக்கபடட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இதில் உடன் தர்மபுரி தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி விஜயன், நாகராஜ், கார்த்திகேயன், வினோத், சுந்தரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.