தேனி மாவட்டம்
பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் எம்எல்ஏ. தலைமை தாங்கினார். நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆணையாளர் தமிஹா சுல்தானா அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது உள்பட கவுன்சிலர்கள்,நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு வசதி துறை, மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் மிக ஆர்வமாக. கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *