தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்…
தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 3 சதவீத இடஒதுக்கீடு குறித்து பின்பற்றபடவில்லை தற்போதைய ஆட்சியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் மாநில துனை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் தெரிவித்தார்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி செயல்வீரர்கள் கூட்டம் தாமபரம் பகுதி தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துனைப் பொதுசெயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப், வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மத்திய பகுதி தலைவர் ஜலாலுதீன், கிழக்கு பகுதி தலைவர் முகமது இக்பால், மேற்கு பகுதி தலைவர் முகமதுரபீக் மற்றும் தாம்பரம் பகுதிகழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துனைப் பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் பேசுகையில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 3 சதவீத இட ஓதுக்கீடு பின்பற்றபடவில்லை ஆனால் தற்போதைய ஆட்சியில் 5 சதவீத இடஓதுக்கீடு வழங்கபட வேண்டும், கோவை சிறையில் உள்ள அரசியல் முஸ்லீம் கைதிகளை பரோலை விட ராஜீவ் காந்தி கொலை வழங்கில் எப்படி தமிழக அரசு விடுதலை செய்ததோ அதே போன்று முஸ்லீம் கைதிகளை விடுக்க வேண்டும் எனவும், முஸ்லீம்களுக்கு பாதுகாவலராக இருக்க கூடிய முதலமைச்சர் தாம்பரம் பகுதியில் இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு மதரஸா பள்ளி அமைத்து தரவேண்டும் எனவும் பாஜக வும் அண்ணாமலை கட்சியும் வேறு இல்லை இரண்டும் ஓன்றுதான் அதிமுகவையும், திமுகாவையும் என்ற திராவிட கழகங்களை அழித்துவிட்டு த.வெ க., அண்ணாமலை வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் தமிழகத்தில் இவர்கள் எண்ணம் ஒருபோதும் எடுபடாது என தெரிவித்தார்.