நாகப்பட்டினம்,ஜூன்.9 –
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திட்டச்சேரி, பூதங்குடி, கட்டுமாவடி, புறாகிராமம், கோதண்டராஜபுரம் குத்தாலம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த
50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கோடை கால வெப்பத்தை தணிக்க இளநீர் வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் அபினேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோர் வழங்கினர். இதில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருந்தாளுநர் எஸ்.சக்திவேல் செய்திருந்தார்.