கூத்தாநல்லூர்., ஜூன். 10
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அரசு டாஸ்மாக் மதுபான கடையை பண்டுதக்குடி கிராம பொதுமக்கள் அகற்ற . கோரி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் துறை ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி இதுவரையிலும் காடுவெட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றபடாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்ட காரர்காரர்களிடம்
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் டாஸ்மாக் மேலாளர் , கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் , கொரடாச்சோரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த கடையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு டாஸ்மாக் மதுக்கடையால் பலர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவித்தனர். போராட்ட காரர்களிடம் அதிகாரிகள் முறையாக பதில் சொல்லாத காரணத்தினால் மாலை 7மணி வரை டாஸ்மாக் கடை முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்றும் வரை கடை முன்பு பொதுமக்கள் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.