தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்.

குண்டடம்,

குண்டடம் அருகே, பொதுப்பாதையில் தனிநபர் பள்ளம் தோண்டியுள்ளதால் அதில் குடியிருப்பு கழிநீர் தேங்கி நின்று சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குண்டடம் பிடிஓவிடம் மனு கொடுத்துள்ளனர்.
குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடை லட்சுமி நகரில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையையொட்டி தனியார் அடுககுமாடி குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் தனியார் குடியிருப்புக்கு அருகில் பாதையையொட்டி கடந்த 20நாட்களுக்கு முன்பு சுமார் 10அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். அந்த பள்ளம் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


அந்த பள்ளத்தில் குடியிருப்பின் கழிநீர் விடப்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிடுகின்றனர்.


இது தொடர்பாக அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் குண்டடம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்துள்ளனர். அதில், குடிதோண்டி கழிநீரை விடுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவரிடம் கூறியும் அதை சரிசெய்யவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம், என குறிப்பிட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *